2025 மே 08, வியாழக்கிழமை

புரியாணி பார்சலில் கரப்பான் பூச்சி

Editorial   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரப்பான் பூச்சியுடன்  கோழிப்புரியாணி பாசலை வழங்கிய   பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (30)  எதிர்வரும் 8 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு,  25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.

குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும்  வைத்தியர்கள்  சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை  விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்புரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது .

இதுதொடர்பில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதேவேளை நேறறைய தினம் பொது சுகாதார அதிகாரிகள் நகர்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு பாவனைக்கு உதவாத அரிசி மூடைகள் 25 கைப்பற்றியதுடன் சுகாதாரமில்லாத பல  உணவகங்களுக்கு  சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர் அதுமட்மன்றி கடந்த 2 வருடத்துக்கு முன்னர் உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் வைத்து இறைச்சி வெட்டிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

 வாழைச்சேனையில் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் வீட்டின் மலசல கூடத்தில் இறைச்சிக்காக அண்மையில் மாடு  வெட்டிய வசம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

  (கனகராசா சரவணன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X