2025 மே 19, திங்கட்கிழமை

புழுட்டுமானோடை குள அணைக்கட்டை உயர்த்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, புழுட்டுமானோடை குளத்தின் அணைக்கட்டை உயர்த்தி, அதிக நீர்ப்பாசனத்தை மேற்கொள்வதற்கான புனர்நிர்மாண வேலைத்திட்டத்தை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், இன்று (28) ஆரம்பித்து வைத்தார்.

 கமநல அபிவிருத்தித்திணைக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தித்திட்டத்துக்கு 19 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

 3 வான்கதவுகளுடன் 12 அடி உயரமும், 900 மீற்றர் நீளமான இக்குளத்தின் தற்போதைய அணைக்கட்டு, மேலும் நீர் பாய்ச்சுவதற்கான 3 கதவுகளுடன் மேலும் ஒரு மீற்றர் உயர்த்தப்படவுள்ளது.

இப்பிரதேசத்தில் வந்தாறுமூலை, சித்தாண்டி, கொம்மாதுறை, மாவடிவேம்பு, வேப்பவெட்டுவான் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கால்நடை வளர்ப்பு பிரதேசம் என்ற வகையில், இக் குளம் அமைக்கப்பட்டதன் மூலம், சுமார் 30 ஆயிரம் வரையான கால்நடைகளின் நீர்த்தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று யானை, மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளும் பயன்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X