2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பெண் ஆளுமைகள் கௌரவிப்பும் விசேட கவியரங்கமும்

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, காத்தானகுடி இஸ்லாமிய இலக்கிய கழகம் ஏற்பாடு செய்த தமிழ் - முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிப்பும் விசேட மகளிர் தின கவியரங்கும் நடைபெற்றன.

கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில், காத்தான்குடி கலாநிதி அலவி சரிபுத்தீன் முன்னோடிகள் பாடசாலை மண்டபத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமிதி றிப்கா சபீன், காத்தான்குடியின் முதல் பெண் இலிகிதர் திருமதி பரீனா றூஹூல்லாஹ், காத்தான்குடியின் முதல் பெண் நூலகர் திருமதி ஹமீதா சுபைர், காத்தான்குடி பொது நூலக பிரதம நூலகர் திருமதி கமலினி புஸ்பராஜா ஆகியோர் இதற்போது நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி எம்.எம்.ஹாரீஸ் மதனி, கழகத்தின் செயலாளர் கலாபூசணம் காத்தான்குடி பாத்திமா உட்பட பலர் அத்திகளாகக் கலந்துகொண்டனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .