2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பெண் உறுப்பினருக்கு அச்சுறுத்தல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபையின் பெண் உறுப்பினரின் ஒருவரின் கழுத்தை வெட்டப்போவதாக, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண் உறுப்பினர், சபையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு, மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பிரதி மேயரைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் உறுப்பினர் திருமதி சசிகலா விஜதேவா எழும்பி, தனக்கு இந்தச் சபையின் பார்வையாளர் அரங்கில் இருக்கின்ற ஒரு சிலர், தனது கழுத்தை வெட்டப்போவதாக அச்சுறுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இதை, மேயர் உட்பட சபையிலிருந்த அனைவரிடமும் உரத்த குரலில் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சபையில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும், பின்னர் அது சுமுக நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.

38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையில், 8 பெண் உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X