Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் சக்தியை பலப்படுத்த பெண்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும், என மத்திய மாகாண சபை உறுப்பினர், திருமதி சாந்தினி கோங்கஹகே மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.
நேற்றைய தினம் (21) மட்டக்களப்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் திருமதி சசிகலா விஜயதேவாவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் நடைபெற்ற 'பெண்களை வலுவூட்டுவோம்' எனும் வேலைத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதேஇ அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'பெண்கள் ஒரு போதும் பலமிழக்காமல் சக்தியுள்ளவர்களாக மாற வேண்டும். இன்று நாட்டின் அரசியலில் என்றுமில்லாதவாறு பெண்களுக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் குரல்களாக பெண் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் செயற்படுவார்கள்.
பெண்களின் வாழ்வாதாரம் பெண்களின் கல்வி பெண்களின் வறுமை ஒழிப்பு இவைகளில்இ பெண் உறுப்பினர்கள் கவனமெடுத்து செயற்பட வேண்டும். நலிவடைந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்.
எமது ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகள் அனைவருக்கும் திறந்துள்ளன. யாரும் எமது கட்சிக்குள் வரமுடியும். எமது கட்சிக்குள் யாரும் வருவதை எமது கட்சி தடுக்காது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நாட்டில் நல்லிணக்க வேலைத்திட்டத்தினை தொடங்கியுள்ளார். ஊர் ஊராகச் சென்று சமூகங்களிடையே நல்லிணக்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தின் கீழ்இ எமது கண்டி மாவட்டத்திலிருந்து முதன் முதலாக மட்டக்களப்பு காமாட்சி கிராமத்திற்கு விஜயம் செய்துள்ளோம்.
நாட்டில் இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால், அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இதனை வலிறுத்தியே இந்த நல்லிணக்க வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது', என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான ரி.சிவலிங்கம்இ ரி.சுரேஸ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் திருமதி லட்சுமி, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் லிங்கராஜா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
28 minute ago
32 minute ago
58 minute ago