Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அபயமளிப்பதற்காக, பெண்கள் காப்பகம் ஒன்றை அமைக்கும் காத்தான்குடி மகளிர் நல ஆர்வலர்களின் ஆலோசனைக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளாரென, காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் மகளிர் நல ஆர்வலருமான ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.
இது விடயமாக விவரம் தெரிவித்த ஸல்மா ஹம்ஸா, கிழக்கு மாகாணத்தில், மகளிர் காப்பகம் ஒன்றின் தேவை குறித்து, மாகாண ஆளுநர், காத்தான்குடி பல்துறைசார்ந்த மகளிர் நலனோம்பு அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார்ந்தவர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றபோது, காத்தான்குடியில் மகளிர் காப்பகம் ஒன்று நிறுவப்படுவதற்கான ஆதரவும் உறுதி மொழியும் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வகையிலான பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், பல்வேறு தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025