2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘பெயர்கள் கூறினால் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காதீர்’

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, மணல் அகழ்வுக்கு அனுமதி கோரினால், அதற்கு அனுமதி கொடுக்க வேண்டாமென, சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

சுற்றாடலை பாதுக்கின்ற விடயங்களில், கிராம உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் முன்னின்று செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரச அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “இயற்கை வளங்களை அழிப்பதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க முடியாது. சுற்றாடலைப் பாதுகாக்கின்ற விடயத்தில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என்றார்.  

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, மணல் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அனுமதியுடன் மணல் அகழ்வில் ஈடுபடுவோர் கட்டாயமாக சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவ்வாறு அல்லாமல் மணல் அகழ்வில் ஈடுபட்டால், இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .