Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை, எதிர்வரும் வாரங்களுக்குள் நடத்தி முடிப்பதென, மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் கூட்டத்தில், இன்று (04) தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், மாவட்ட மத்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் வை.பி.அசார், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீசன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடத்தில் நடைபெற்ற சிறுபோகம், வரவுள்ள 2018-17 பெரும்போகம், விவசாயிகளது பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரம் வழங்கல் என, பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டங்கள், எதிர்வரும் சனிக்கிழமை (08) நடைபெவுள்ளன.
போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள், மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (10) நடைபெறவுள்ளன.
அதேபோன்று 11ஆம் திகதி, கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள், கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பெரும்போக விவசாயச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களின் போது, பெரும்போக விவசாயச் செய்கைக்கான திகதிகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
அந்தந்த விவசாயப் பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, வயற்காணி உழுதல், விதைப்புத் தொடங்குதல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவிருக்கின்றன. அதன்படி பெரும்போகத் தீர்மானங்கள், ஆரம்பக் கூட்டங்களில் எடுக்கப்படும்.
இதேவேளை, இக்கூட்டத்தின் போது, வங்கிகளின் கடன்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடைப் பிரச்சினை, யானைப் பிரச்சினைகள், காடுகள் அழிப்பு எனப் பல பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
42 minute ago
55 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
23 Aug 2025