Janu / 2025 ஜூன் 30 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் தனது தாயுடன் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்த நிலையில் தொழிற்சாலைக்குள் தாய் சென்றபோது பின்னால் வந்த சிறுவன் மீது பேருந்தின் டயர் ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

7 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
59 minute ago
1 hours ago