Janu / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(29) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை சுகாதார தொழிலாளர்கள் அப்பகுதியில் கடமையிலீடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலமொன்று காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago