Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல், மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான தகல்வல்களை பேஸ்புக்கில் வெளியிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸாரால் கடந்த 26ஆம் திகதி மாலை கைது செய்யப்படட சந்தேக நபர்கள், நீதிமன்ற அனுமதியின் கீழ், ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாவட்ட பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று (29) ஆஜர் செய்யப்பட்டனர்.
இவ்வேளையிலேயே, சந்தேகநபர்களை டிசெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
தீவிரவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர்கள், சித்தாண்டி, வந்தாறுமூலை, கொம்மாதுறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago