2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக் மோதல்; 8 பேருக்கும் சரீரப் பிணை

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி பேஸ்புக் பக்கத்தால் எழுந்த சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கும், சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி, இந்நபர்களுக்களிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் 8 பேர் கைதுசெய்யப்பட்டு, நேற்று (24) வரை விளக்கமறியல் வைக்கபபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் 8 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்று உலாவியமையே, இந்த மோதலுக்குக் காரணமென, விசாரணைகளின்போது தெரியவந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .