2025 மே 22, வியாழக்கிழமை

பொது மலசலகூடம் அமைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளின் நன்மை கருதி, காத்தான்குடி பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் நவீன முறையிலான புதிய பொது மலசலகூட கட்டடத்தொகுதி  முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் பொது மலசலகூடம் இல்லாதது பொதுவான ஒரு நீண்டகால குறைபாடாகக் காணப்பட்டது.

எனினும், நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் முயற்சியால், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இருபத்தி இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதியொதுக்கில், இது அமையப்பெற்றுள்ளது.

இந்த மலசலகூடத் தொகுதியை, காத்தான்குடி நகர சபை பராமரிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .