Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தலைமைக் காரியா லயம் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கண்ணகியம்மன் வீதிப்பகுதியில் திறந்து வைக்கப் பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாயவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இந்தக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்குத் தமிழர் முற்போக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் திறந்து வைத்ததுடன் அலுவலகப் பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் இணைப்பாளர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago