Freelancer / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வாழைச்சேனை - போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியை உருகுலைந்த நிலையில் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியையின் கணவர் யாழ். இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன், இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் ஆசிரியை தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராமசேவகர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு யன்னல்கள் உடைந்துள்ளதுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக ஆசிரியை காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும் குற்றதடுப்பு பிரிவின் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார். R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago