Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 21 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமத்துக்குப் பொலிஸ் எனும் திட்டத்தின் கீழ், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தால், புதிய காத்தான்குடியில், பொலிஸ் நடமாடும் நிலையம், இன்று(21) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயக் கொட ஆராய்ச்சி இந்த நடமாடும் பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
பொலிஸ் அதிபரின் பணிப்புரையின் பேரில், கிராமத்துக்கு நடமாடும் பொலிஸ் நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடிப் பகுதி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர மற்றும் ஐ.பி.ஆர்.ஜெயசீலன், காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நடமாடும் பொலிஸ் நிலையம் ஒரு மாத காலத்துக்கு இயங்கவுள்ளதுடன், இந்த நடமாடும் பொலிஸ் நிலையத்தால், கல்வி சுகாதாரம், சிரமதானம், மற்றும் கலை கலாசாரம் விiளாட்டு என்பன போன்ற செயற் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயக் கொட ஆராய்ச்சி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
24 May 2025
24 May 2025