2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொலிஸ் நிலையத்தின் பெயரை மாற்றுதல் தொடர்பில் தீர்மானம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி, பொலிஸ் நிலையத்தின் பெயரை “மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையம்” எனப் பெயர் மாற்றம் செய்வது அல்லது பொலிஸ் நிலையத்தை, காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மாற்றுதல் என்ற தீர்மானம், மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் நேற்று (15) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மாநகர சபையின் ஆறாவது அமர்விலேயே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காத்தான்குடி, பொலிஸ் நிலையத்தின் பெயரை மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையமெனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பில், மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதனால் கொண்டு வரப்பட்ட பிரேரணை, சபையில் ஏற்றுகொள்ளப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகரசபைச் செயலாளர் உள்ளிட்டோரும் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X