Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்கால சந்ததியினரை ஒழுக்கமுள்ள சிறந்த தலைவர்களாக உருவாக்கும் நோக்கில், நாடெங்கிலுமுள்ள பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணிகள் அமைக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த விசேட திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபது பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள படையணியில் இணைந்து கொண்ட மாணவர்களையும், பெற்றோர்களையும் பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும் விசேட நிகழ்வு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்றது.
நிகழ்வில் படையணி செயற்பாடுகளில் திறமை காட்டிய பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், ஆசிரியர்களுக்கு விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணவர்த்தன மேலும் உரையாற்றுகையில்,
“பொலிஸ் திணைக்களம் நாடெங்குமுள்ள பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படை அணிகளை உருவாக்கும் விசேட திட்டத்தை தற்போது திருப்திகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
“பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் மேற்பார்வை பொலிஸ் உத்தியோக்தரின் ஏற்பாட்டில் இந்த பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
“இந்த ஏற்பாட்டுக்கமைய, கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இந்த மாணவர் சிப்பாய் படையணியினரை அமைக்கும் திட்டம் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago