2025 மே 13, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் ஒழிப்பு வீதி நாடகம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதியின் எண்ணக்கருவில், “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டம், கடந்த 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்தவகையில், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், வீதி நாடகமொன்று, இன்று (09) இடம்பெற்றது.

“போதைப்பொருள் அபாயத்தை ஒழித்து, வறுமையைக் குறைத்து, அபிவிருத்தியை மேம்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில், செயலக சமுர்த்தித் தலைமையக முகாமையாளர் திருமதி தேவமனோகரி பாஸ்கரன் தலைமையில், இந்த வீதி நாடகம் இடம்பெற்றது.  

விநாயகபுரம் கிராம மக்கள் மத்தியில், பாடசாலை மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட குறித்த வீதி நாடகத்தை, செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X