Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும், அவ்வாறு அடிமையானவர்களைக் குணப்படுத்துவதுற்கும், தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபை துரித நடவடிக்கையை எடுத்துவருகின்றது.
இச்சபை, பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் துண்டுபிரசுரங்கள் வெளியிடுதல், விசேட உளவள ஆலோசனைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள புதிய அலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, 0710301301 என்ற புதிய துரித அலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதனூடாக பொதுமக்கள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகள், ஆலேசனைகளை 24 மணிநேரமும் பெற்றுக்கொள்ள முடியுமென, தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவி உளவியல் ஆலோசகர் ஜீ. விஜயதர்சன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago