Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரை, காத்தான்குடியில்வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி, 3 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர்கள் கடந்த 12 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago