A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு ரிதிதென்னப் பகுதியில் ஓமடியாமடு கிராம மக்களினால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்துக்கு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் அப்பகுதி தேரர் ஈடுபட்டார்.
அத்துடன் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்களை கொரோனா தொற்றினை காரணம் காட்டி குறித்த இடத்தினை விட்டு கலைந்து செல்லும்படி பணித்தனர்.
இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த மக்களை, திடீரென உள் நுழைந்த ஓமடியாமடு சுதுகல விகாரையின் கடவத்த மடுவே சுபோதாலங்கார தேரர், மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த பத்மன் எனும் நபருக்கு ஆதரவு தெரிவித்தும் நியாயப் படுத்தியும் குழப்பம் விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு பிரதேசத்தில் இரவு பகலாக மணல் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.இதன்போது மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களினால் ஓமடியாமடு பிரதான வீதியானது சேதமடைவதாகவும் இதனால் தங்களது போக்கு வரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
ரிதிதென்ன கொழும்பு வீதியில் ஒன்று கூடிய மக்கள் மணல் ஏற்றுவதை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பியும் சுலோகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
27 minute ago