2025 மே 09, வெள்ளிக்கிழமை

போருக்குப் பிந்திய அபிவிருத்தி பற்றி ஆய்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய போருக்கு முன்னரான நிலமையும் தற்போது காணப்படுகின்ற நிலமையையும் அறிந்து கொள்வதற்காக, டோகா பல்கலைகழக உயர்பட்ட படிப்பை  மேற்கொள்கின்ற 09 நாடுகளைச் சேர்ந்த 16 பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு இன்று (20) வருகை தந்து விடயங்களை ஆராய்ந்தனர்.

மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையிலான திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ். அமுதலிங்கம் ஆகியோரடங்கிய மாவட்டச் செயலக அதிகாரிகள்  குழுவினரால், வெளிநாட்டு நிபுணர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

டோகா பல்கலைகழகத்தில் மீள் கட்டுமானத்துறை வர்த்தக வியாபார தொழில் நுட்பத்துறை அரசியல் விஞ்ஞானத் துறைகளில் கலாநிதி பட்டத்தினை பெறுவதற்காக கல்வியினை கற்று வருகின்ற குழுவினரின் பணிப்பாளர் சுல்தான் பரகத், கொழும்பு பல்கலைகழகத்தின் உயர்தரபிரிவின் விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ் அஸிஸ் ஆகியோரும்

இச்சந்திப்பின் போது, வட, கிழக்கு மாகாணங்களில் நிகழ்கின்ற தடையூறுகளை நிவர்த்தி செய்து, எவ்வாறு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வது, எவ்வாறான உதவித்திட்டங்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது, மீள்குடியேற்றப்படுவதற்கு எவ்வாறாக புறக்காரணிகள் தடையாக இருந்து வருகின்றது, அதற்கான தீர்வுகள் பற்றியும் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X