Editorial / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்
தமிழ் மக்களை, தமிழீழ விடுதலைப் புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியபோது, அதற்குத் தமிழ்த் தலைமைகள் ஆதரவு வழங்கினார்களென, நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.
போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது, அதற்காக எம்.ஏ சுமந்திரன் உட்பட தமிழ்த் தலைமைகள் பலர் பதில் சொல்ல வேண்டி வருமெனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்ப் பிரிவுக்கான அலுவலகம், மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், சின்ன ஊறணியில் நேற்று (01) மாலை திறந்துவைக்கப்பட்டது.
அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பிரிவுக்கான பிரதான அமைப்பாளர் கு.ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தயாசிறி ஜயசேகர எம்.பி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தலைவர்களையோ முஸ்லிம் தலைவர்களையோ உருவாக்காத நிலையே இருந்துவந்ததாகவும் எதிர்வரும் காலத்தில், நல்ல தமிழ் - முஸ்லிம் தலைவர்களை உருவாக்கி, கிழக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றம் வரையில் கொண்டுசெல்வதற்கான ஆயத்தங்களைச் செய்துவருவதாகவும் கூறினார்.
வட, கிழக்கு மக்களின் கண்ணீரையும் கவலையையும் நாடாளுமன்றத்தில் பாவித்து, தங்களை வளர்த்துக்கொள்ளும் தமிழ்த் தலைமைகள், வட,கிழக்கு மக்களின் மரணச் சான்றிதழ்களைக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து பணம் சம்பாதிக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றார்.
17 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
4 hours ago