2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

போலி ஆவணங்கள் தயாரிப்பு; ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்றை, நேற்று (11) முற்றுகையிட்ட பொலிஸார், ஒருவரைக் கைது செய்ததுடன், அங்கிருந்த மடிக்கணினி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றை நேற்றிரவு பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

இதன்போதே, போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன், ஆவணத் தயாரிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X