2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத் தாள்களுடன் நால்வர் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர், நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள், பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 11 போலி நாயணத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர்கள், ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு, நாணயத்தாளை வழங்கும் போது, அவை போலி நாணயத்தாள் என அறிந்த ஊழியர், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் நாணயத்தாள்களை வாய்க்குள் திணித்து மென்று விழுங்க எத்தனிக்கையில், பொலிஸாரால் நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X