Editorial / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் மட்டு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் ஒருவரை எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (02) உத்தரவிட்டார்.
திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக போலி அவுஸ்ரேலியா விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்
இதனையடுத்து அந்த விசாவில் இலங்கையில் இருந்து பயணிக்க முடியாது இந்தியா சென்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்த நிலையில் இந்தியா சென்ற குறித்த நபர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமான மூலம் செல்வதற்காக முயற்சித்த போது அந்த விசா போலியானது என தெரியவந்துள்ளது. அதனையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பினார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவர் செய்த முறைப்பாட்டையடுத்து போலி முகவரை திருகோணமலையில் வைத்து மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்தனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026