Editorial / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட் விதிகளை மீறும் வகையில், சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டின் பேரில், காத்தான்குடி நகரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த அபேட்சகர் ஒருவரும் ஆதரவாளர் ஒருவரும் நேற்று முன்தினம் (05) இரவு, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் கடமைகளுக்கான விசேட நகர உலாவில் பொலிஸார் ஈடுபட்டிருந்தபோது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .