2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர்களிடையே பற்சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

பாடசாலைகளில் மாணவர்களிடையே நிலவிவருகின்ற பற்சுகாதாரத்தினை மேன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி இணைப்பாளர் சோ.கணேசமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலங்களாக மாணவர் மத்தியில் பற்சுகாதாரத்தை பேணிவருவது மிகக்குறைவாக இருக்கின்றது. இதனால் பல் சம்மந்தமான நோய்கள் மாணவர்கள் மத்தியில் நிலவிவருகிறது. இதனை மாணவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பாடசாலைகளிலும் பற்சிகிச்சை சம்மந்தமான சிகிச்சை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசமுடன் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது எபற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X