2025 மே 07, புதன்கிழமை

மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றும் வகையில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாக முரண்பாடுகளற்ற சூழலை ஏற்படுத்த முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்திப் தெரிவித்தார்.

மருதமுனை அல்மன்னார் மத்திய கல்லூரியின் கல்வி பொதுத்தர உயர்தர பிரிவு  மாணவர்களுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய கிளையினட ஏற்பாட்டில் வியாழக்கிழமை  (29) 'சிறுவர் உரிமைகளும் பாதுகாப்பும்'; எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வுக்; கருத்தரங்கில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்  போதே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ' இன்றைய கால கட்டத்தில் சிறுவர் தொடர்பான பல பிரச்சினைகள் சமுகத்தில் உள்ளது. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலைமையினை உருவாக்க, ஒவ்வொரு மாணவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எம்மத்தியில் சரியான விழிப்புணர்வு இல்லாமையே சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு முக்கிய காரணமாகும்.

இதனை எதிர்காலங்களில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் துரிதமாக  முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாமும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டிய தேவையுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பாக மாணவர்கள் விழிப்பாக இருப்பதுடன் பாடசாலை ஒழுக்க விழுமியங்களை பின்பற்றுபவராக இருக்க வேண்டும்' என  அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X