2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முத்தான வியர்வை வாழ்வின் எழுச்சித்திட்ட உற்பத்திப்பொருள் சந்தை

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

முத்தான வியர்வை எனும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டப் பயனாளிகளின்; உற்பத்தி பொருட்களின் சந்தை இன்று சனிக்கிழமை (24) மட்டக்களப்பு நாவற்குடாவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டப் பயனாளிகளினால்  உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் விற்பனையும் செய்யப்பட்டது.

இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,
'ஒரு குடும்பத்தின் பொருளாதார சுமை என்பது கண்களினால் காணக் கூடிய விடயமல்ல. குடும்பத்தின் தலைவனோ அல்லது தலைவியோ குடும்பத்தைத் தாங்கி நிற்கும் ஒருவர் படும் கஷ்டங்களை, அந்த குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் புரிந்துக்கொவதில்லை.

ஒரு குடும்பத்தின் சுமையை சுமப்பதற்கு அனைவருமே முன்வரவேண்டும். வீட்டிலிருந்து கொண்டு, பெண்கள் சில முயற்சிகளை செய்யலாம். பிள்ளைகள் சில முயற்சிகளை செய்யலாம்' என்று கூறினார்.

'பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆகக்குறைந்து ஒரு மணிநேரத்தையாவது பெற்றாருடன் இதற்கு உதவியாக செலவிடலாம். எனவே நமது மனங்களிலும் செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X