2025 மே 14, புதன்கிழமை

மாதாந்த மீளாய்வுக் கூட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம மேம்பாட்டுக்கான திட்டம், 100 நாட்கள் வேலைத்திட்டம், இந்திய வீட்டுத் திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான மாவட்டத்தின் 5 ஆண்டு அபிவிருத்தி திட்டம், விசேட அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் திட்டங்கள் என்பன குறித்து மீளாய்வு செய்யப்பட்டன.

இதன் போது கருத்துத் தெரிவித்த திட்டமிடல் பணிப்பாளர்,

அனைத்துத் திட்டங்களும் விரைவாக நிறைவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். அதே நேரம் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடங்கல்கள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இக் கூட்டத்தில், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா, திட்டமிடல் செயலக கணக்காளர் எம்.எம்.பசீர், பிரதி உதவித்திட்டமிடல் பணிப்பளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X