2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முதலை கடித்ததில் மீனவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

களுவஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தெ.காண்டீபன் (வயது 35) என்ற மீனவர் முதலை கடித்ததில் காயமடைந்த  நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுவலையுடன், இன்று (16) அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்ட இவர்,   மட்டக்களப்பு வாவியில் தோணியில் இருந்துகொண்டு மீன்பிடி நடவடிக்கையில்; ஈடுபட்டிருந்தபோதே, முதலையின் கடிக்கு உள்ளாகியுள்ளார்.

தான் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் 14 அடி நீளமான முதலை ஒன்று, தோணியின் அடிப்பாகத்தை உடைத்த நிலையில் தோணி இரண்டாக உடைந்துள்ளது. அவ்வேளையில் குறித்த தனது  காலைப் பிடித்து முதலை இழுத்ததாகவும் அதன் பிடியிலிருந்து மிகச் சிரமத்துக்கு மத்தியில் ஏனைய மீனவர்களின் உதவியுடன்  விடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .