2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீன் அறுவடை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள தும்பங்கேணிக் குளத்தில் மீன் அறுவடை இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இக்குளத்தில 135,000 மீன்குஞ்சுகள் விடப்பட்டிருந்தன. இக்குளத்தில் பிடிக்கப்பட்ட கணையான், விரால் உள்ளிட்ட மீன்கள் குளக்கரையில்; வைத்து  விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ மீன் 200 ரூபாய்  முதல் 250 ரூபாய் படி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தும்பங்கேணி வளர்பிறை மீன்பிடிச் சங்கத்; தலைவர் ந.விஜயராசா தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், 'இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்து வெற்றி பெற்று, இணைந்து குரல் கொடுப்பதன் ஊடாக  சிறுபான்மை இனத்தின் உரிமைகளை பெற்றெடுக்க முடியும். இதற்காக பிராந்திய அரசியல், பிராந்தியக் கட்சி, பிராந்திய மொழி போன்றவற்றில் பற்றுள்ளவர்களாகவும் அதனை ஆதரிப்பவர்களாகவும் எமது சிறுபான்மை இனம் இந்த நாட்டில் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் இந்த நாட்டுக்குள் வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மை இனமாக காணப்படுகின்றோம் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாங்கள் வடக்கு, கிழக்கிலே செறிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே எமது இனம், மொழி, நிலம், போன்றவற்றினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. இதற்காக தொடர்ச்சியாக எமது பலத்தினை நிரூபித்துக்காட்ட வேண்டும். பெரும்பான்மையினக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் நாங்கள் இவற்றினை ஒருபோதும் நிரூபிக்க முடியாது என்பதை எமது மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், எமது அமைச்சு எதிர்காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்புக்கு பலதரப்பட்ட உதவிகளை வழங்கும். இதனால் நன்னீர் மீன்பிடியாளர்கள் உற்பத்திகளை பெருக்கிக்கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். இத்தொழிலை மேற்கொள்ளும்போது மீன்பிடியாளர்களுக்கு கால இடைவெளிகள் ஏற்படலாம். அதனை மீனவர்கள்; நிவர்த்திசெய்து கொள்வதற்கு வேறு தொழில்களை நாடவேண்டும். மட்டக்களப்பினை பொறுத்தவரையில் எமது தொழிலாளர்கள் ஒரு தொழிலில் மாத்திரம் இருக்காமல் வேறு தொழில்களையும் மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

எமது பிரதேசத்தில் கூடுதலாக மீன்பிடி, விவசாயம், விலங்கு வளர்ப்பு, வேளாண்மை, பால் உற்பத்தி போன்ற தொழில்களில் கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொள்வதனை அவதானிக்கக் கூடியாதாக இருக்கின்றது. எத்தொழிலை மேற்கொண்டாலும் அதனை திருப்திகரமாக மேற்கொள்ள வேண்டும். மக்கள்; உழைக்கின்ற உழைப்பினை சுரண்டுவதற்காக முதலாளிவர்க்கம் செயற்படுகின்ற தன்மையினையும் தற்காலத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  எனவே பிறரின் சுரண்டலுக்கு உழைப்பாளிகள் இடமளிக்கக் கூடாது' என்றார்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X