2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மான் இறைச்சி கடத்தியவருக்கு சரீரப் பிணையில் செல்ல அனுமதி

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் பிரிவில் 10 கிலோகிராம் மான் இறைச்சியை எடுத்துச் சென்ற குற்றஞ்சாட்டில் கைதுசெய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட சந்தேகநபரை, 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த புஸ்பநாதன் நிருபன் என்ற சந்தேகநபரை பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம். றிஷ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபருக்கு எதிராக மான் இறைச்சி கடத்திய குற்றஞ்சாட்ட வழக்குகள் ஏற்கெனவே 3 பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் அதில் ஒரு வழக்கில் இவர் 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்தநபர், சட்டவிரோதமான முறையில் இறைச்சி கடத்துவதற்காகப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள், கைப்பற்றப்பட்டு ஏற்கெனவே இரண்டு முறை நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X