2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வாழ்வாதார பிரச்சினை

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும், பெண்கள் வாழ்வாதார ரீதியாக தாம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

பன்நெடுங்காலமாக ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி, வடித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு வரும் தமக்கு அரசாங்கம் எதுவித எதவிகளையும், ஏற்படுத்தித் தரவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

தமது தொழிலில், போதியளவு வருமானமில்லதுள்ளது, தராசு, பாதுகாப்பு பெட்டிகள் போன்றவற்றையாவது எமக்குப் பெற்றுத்தர வேண்டும் என்று குறித்த பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களப்புக்களில் துறைநீலாவணை, மகிழூர்முனை, கல்லாறு, நாகபுரம், போன்ற இடங்களில் சுமார் 100 பெண்கள் இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X