Sudharshini / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
- வடிவேல் சக்திவேல்
பிள்ளைகளிடம் நற்பண்பையும் நல்லொழுக்கங்களையும் விதைப்பதற்கான சிறந்த பருவம், முன்பள்ளிப் பருவமாகும். இன்று திறமை காட்டும் இந்தப் பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டலையும் மார்க்கக் கல்வியையும் வழங்குவது பெற்றோர்களின் கட்டாயக் கடமையாகும் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி, மீராவோடை உதுமான் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்; மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நற்பண்பும் நல்லொழுக்கமும் உள்ள நல்ல சமூகத்தை உருவாக்கும் தளமாக முன்பள்ளிகள் உள்ளன. இப்பிள்ளைகள் எதையும் இலகுவில் உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்கள். அதனை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிகச்சிறந்த ஆளுமை உடையவர்களாக இவர்களை ஆக்குவதற்கான அடித்தளம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இந்த வயது அழுக்கற்ற தூய்மையான எண்ணங்களை மட்டுமே சுமந்த வயதாகும். எந்தவிதமான தீய செயற்பாடுகளினாலும் தாக்கத்திற்கு உள்ளாகாத வயதாகும். இந்தக் குழந்தைகள் வெள்ளைக் காகிதங்களை ஒத்தவர்கள். இவர்களை சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்த்துள்ள பிரஜைகளாக மாற்றும் ஆரம்ப கட்டப் பொறுப்பு முன்பள்ளிகளிடமும் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடமும் மட்டுமே காணப்படுகின்றது. அதை அவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறான வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் மூலம் மாணவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அவர்களை தட்டிக்கொடுத்து இன்னும் அவர்கள் சாதனை படைக்க இந்த பரிசளிப்பு விழாக்கள் உதவுகின்றன என கூறினார்.
.jpg)
.jpg)
.jpg)
10 minute ago
11 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
16 minute ago