2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மின்மானி வாசிப்பாளர்களாக மட்டக்களப்பு இளைஞர், யுவதிகளை நியமிக்க தீர்மானம்

Thipaan   / 2017 மார்ச் 31 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில், மின்சார சபையில் மின்மானி வாசிப்பவர்கள் பலர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாகப் இப்பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்குமாறும் களுவாஞ்சிகுடி பிரதேச அபிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்மானி வாசிப்பாளர்களாக பல பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்காகப் போராட்டம் நடாத்திவரும் நிலையில் இவ்வாறு பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களை நியமித்துள்ளதை அனுமதிக்கமுடியாது.

மின்சார துறை அமைச்சர் அவரது பிரதேசத்தினைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவேண்டும் என்பதற்காக மின்சாரசபையின் மின்மாணி வாசிப்பவர்களாகவும் சாரதிகளாகவும் பல பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களை இங்கு நியமித்துள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் குறித்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு குறித்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை மின்சார துறை அமைச்சர் உட்பட அரசாங்கத்துக்கு அனுப்பிவைப்பது எனவும் இணைத்தலைவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X