Administrator / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களையும் காணவில்லை.மற்றைய மகன் தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். நான் தற்போது மூன்று பிள்ளைகளும் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.
காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மூன்று மகன்களும் இல்லாமல் போய் விட்டனர். ஒரு மகன் வாகரை கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர். 1994ஆம் ஆண்டு காணாமல் போனார். யார் கடத்திக் கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது. அக்காலப் பகுதியில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே இருந்தனர்.
மற்றைய மகன் கண்டலடி தரவைப் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.
இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை.
எனது மூன்றாவது மகன் 2006ஆம் ஆண்டு வேலை செய்து விட்டு வரும் போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நான் மூன்று மகன்களையும் இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும் துன்பத்தோடுமே எனது காலத்தை கழித்து வருகின்றேன்.
எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago