2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மின்வெட்டு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் ஐந்து தினங்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்தது.

எதிர்வரும் 19ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை கறுவாக்கேணி, கிண்ணையடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, புலிபாய்ந்தகல் ஆகிய பகுதிகளிலும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை மிச்சிநகர், மீPராகேணி, ஜின்னா வீதி, சவுக்கடி, தளவாய், புண்ணைக்குடா, தைக்கா வீதி ஆகிய பகுதிகளிலும் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை வட்டவான், காயான்கேணி, மாங்கேணி, மாவடிவேம்பு, ஏறாவூர், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளிலும் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை கல்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பகுதிகளிலும் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை திருமலை வீதி (தாண்டவன்வெளி-ஊறணி பகுதி), ஞானசூரியம் சதுர்க்கம், இருதயபுரம், ஊறணி ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X