Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் மாபெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழர் விழாவுக்கு, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் விழாவில் ஊர்வலமும் இன்னபிற தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அன்றை தினம் பிற்பகல் 1.30க்கு மட்டக்களப்பு கல்முனை வீதியில் கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் தமிழர் விழா ஊர்வலத்தில் இரா. சம்பந்தன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதுடன், பொதுமக்கள் சகலருக்கும் பகிரங்க அழைப்பு விடுப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago