Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு பொலிஸ் மா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், புதன்கிழமை (06) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரதேச செயலகங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களில் மாதவணை, பெரிய மாதவணை மற்றும் நெளிகல் போன்ற மேய்ச்சல் தரைகளுக்கு கால்நடைகள் கொண்டுசெல்லப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் பண்ணையாளர்கள், தங்கள் கால்நடைகளைக் குறித்த பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்கள். எனினும், கடந்த ஆண்டு போலவே இவ்வருடமும் இப்பிரதேசத்தில் அத்துமீறி பயிர்செய்கை மேற்கொள்ளும் வேறு மாவட்ட விவசாயிகளினால் பண்ணையாளர்கள், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பாக ஏறாவூர் மற்றும் கரடியனாறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் அவை உரியமுறையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.
அதன் பின்னர் இவ்விடயம் மாகாண விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது வனப்பரிபாலன திணைக்களம், மேற்குறித்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொலிஸ் அத்தியேட்சகர் ஆகியோரைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர்களது அசமந்தப்போக்கினால் பண்ணையாளர்கள் தொடர்ச்சியான பாதிப்புக்கு உட்படும் நிலையே தொடர்ந்தது.
இந்நிலையில் பொலிஸ் மா அதிபருக்கு, இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் முறையிட்டதையடுத்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க, குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆகிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு பொலிஸ் மா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago