2025 மே 07, புதன்கிழமை

மாவடி ஆற்றுக்கு புதிய அணைக்கட்டு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாவடி ஆற்றின் அணைக்கட்டு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி றொபின் மூடியினால் இன்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஊடாக அவுஸ்திரேலியாவின் 5.2 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்; 06 கதவுகளைக் கொண்டதாக 12 மீற்றர் நீளத்தில் இந்த அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவடி ஆற்று நீரின் உதவியுடன் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தின் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்களில் வேளாண்மை செய்கை பண்ணக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X