Suganthini Ratnam / 2016 நவம்பர் 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு -செங்கலடிப் பதுளை வீதியை அண்டியுள்ள மாவளையாறுக் கிராமத்தில் குடியிருந்த மக்கள் சிலரின் காணிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மாவளையாறுக் கிராமத்தில் மக்கள் குடியிருந்த சில காணிகள் வன இலாகாவுக்குச் சொந்தமானதாகக் கூறி எல்லை இடப்பட்டமை தொடர்பில் ஆராயும் கூட்டம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (23) நடைபெற்றது.
தங்களின் காணிகளை வன இலாகா அதிகாரிகள் எல்லை இட்டமை தொடர்பில் தம்மிடம் இதுவரையில் 27 குடும்பங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர்பற்றுப் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
கடந்தகால வன்செயல்கள் காரணமாக இக்கிராமத்தில் வாழ்ந்துவந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
இந்நிலையில், 2012 -2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவளையாறுக் கிராமத்திலுள்ள சில காணிகளை அளந்து வன இலாகாவுக்குச் சொந்தமானதாகக் கூறி எல்லை இடும் பணியில் வன இலாகா அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதனை அறிந்த அக்காணிகளின் உரிமையாளர்கள், தாங்கள் வாழ்ந்த இடம் என்பதுடன், தங்களுடைய காணி எனவும் கூறியபோதிலும், வன இலாகா அதிகாரிகள் அந்த மக்களுடன் கடுமையாக நடந்துகொண்டதாகவும்; தெரியவந்தது.
மேலும், மர நடுகைக்கான ஒப்பந்தத்தைச் செய்து வன இலாகா அதிகாரிகள் மரம் நட்டுள்ளனர். ஆனால், அவை கைவிடப்பட்ட நிலையில் காடு வளர்ந்து காணப்படுகின்றது.
மாவளையாறுக் கிராமத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை குடிநிலங்களாகக் கருத வேண்டும் என்பதுடன், அக்காணிகளானது அரசாங்கக் காணி என்ற நிலையிலிருந்து வன இலாகா அதிகாரிகள் கைவிட வேண்டும். வன இலாகாவுக்குரிய எல்லைக்கல்லை மாவளையாற்றுக் கிராமத்தின் ஓரமாக நட்டு மக்களின் காணிகளை மக்களுக்கு கையளிப்பதற்காக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டது.
51 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
21 Dec 2025