Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, புளியந்தீவு, சல்லிப்பிட்டி பிரதேச மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக அமைந்த காணிப்பதிவு தொடர்பான விடயங்களை ஆராயும் முகமாக, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவான், நேற்று (11) களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளியந்தீவு தெற்கு 18ஆம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜனின் ஏற்பாட்டில், மாநகர முதல்வரின் இக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
சல்லிப்பிட்டிப் பொதுமக்கள் மற்றும் ஞான வைரவர் ஆலய நிர்வாக சபையினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கையாக அமைந்த காணிப்பதிவு தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக இவ்விஜயம் அமைந்தது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகர பிரதிமுதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மட்டக்களப்பு மாவட்ட காணி உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்வரன், மண்முனை வடக்குப் பிரதேச குடியேற்ற உத்தியோகத்தர் க.ஞானப்பிரகாசம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவ்விஜயத்தின் போது, அப்பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு சாதகமான பல கருத்துகள் கலந்துரையாடப்பட்டன என்பதுடன், அம்மக்களின் காணிப்பதிவு விடயத்தை விரைவில் பூர்த்தி செய்து தருவதாகவும் இதன்போது மாநகர முதல்வர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago