Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 29 , பி.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம், ஐக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக அனைவருக்குமான உரிமைகளும் சேவைகளும் உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுதல் வேண்டும். என்ற அடிப்படையில் ACTED நிறுவனத்தின் அணுசரனையில் இறக்காமம் ஹிக்மா சகவாழ்வு மன்றம் இணைந்து செயற்படுத்தும் "சகவாழ்வை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின்
பங்களிப்பு எனும் செயலமர்வு அம்மன்றத்தின் தலைவர் எம்.ஐ. பாயிஸ் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், கிராம நிலதாரி நிருவாக உத்தியோகத்தர் இந்திரசிறி யசரட்ன பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற இனவெறுப்பு செயற்பாடுகளின் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை.
நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத் திட்டம் முதலில் மக்களின் நேரடி பங்கேற்பின் ஊடாகவே சகவாழ்வை உறுதிப்படுத்க முடியும். இந்நிகழ்விற்கு, வடக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் ஏ.அமீர் சிறப்பு வளவாளராக கலந்து கொண்டார். R
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025