Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள், சபை பொறுப்பேற்று முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை, இன்று (08) ஒழுங்கு செய்திருந்தனர்.
இதன்படி, மாநகர எல்லைக்குள் வதியும், தொழில் புரியும் மக்களின் வரிப்பணத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட 08 வீதிகள் திறந்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையால் 52 வீதிகளைப் புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் 08 வீதிகளே, இவ்வாறு முற்றுப்பெற்றுள்ளன.
மாநகர பொறியியலாளர் த.தேவதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago