Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சக்தி , ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மக்கள் நலன்சார்ந்த திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளாரென, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்தல், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேச்சல்தரை விடயம் என்பனவற்றுக்கான தீர்வுகள் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இவ்வாண்டுக்கான இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திகென 1,209 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 10,147 வேலைத்திட்டங்கள் இனங்காணப்பட்டன.
ஜனாதிபதி செயலகம், கிழக்கு மாகாண சபை விசேட வேலைதிட்ட நிதி, அரச சார்பாற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 720 மில்லியன் ரூபாய் நிதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் 6027 வேலை திட்டங்கள் முடிவுற்றுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் மா.உதயக்குமார் இதன்போது தெரிவித்தார்.
நீர்ப்பாசனம், வடிகான், டெங்கு, கல்வி, சுகாதாரம், திண்மக் கழிவு முகாமைத்துவம் எனப் பலதரப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு குறித்தும் இங்கு ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .