Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வரிப் பணத்தில் வருகின்ற நிதி, நூறு சதவீதம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி கவனமாக உள்ளார் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் திட்டத்துக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “சபிரி கமக் - நிறைவானதோர் கிராமம்” என்ற வேலைத்திட்டம் தொடர்பான கூட்டங்கள், பிரதேச செயலகங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவகர் பிரிவுகளுக்கு, முதல்கட்டமாக 690 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிராமங்களுக்கு 20.4 மில்லியன் ரூபாய் நிதி நிதியொதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“சபிரி கமக் - நிறைவானதோர் கிராமம்” என்ற வேலைத்திட்டத்தில் ஒரு கிராம சேகவர் பிரிவுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்கள் மூலம் மக்கள் முழுமையான பயனைப் பெற்றார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறிய அவர், கம்பெரலியத் திட்டத்தின் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரது முகம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை இடுவதற்கு, திட்டத்துக்கு வந்த நிதியில் இருந்து 18 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago