Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 15 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடு தொடர்ந்து கொண்டிருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி, இன்று (15) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அரசாங்கத்தின் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மாற்றமும் தொடர்ச்சியான விலையேற்றங்களும் அதனையே உறுதி செய்கின்றன.
“எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அமுல்படுத்த முன்வர வேண்டும். இல்லையேல், கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும்.
“மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்.
“ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது.
ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது பதவிகளைப் பலப்படுத்தி, தத்தமது கட்சிகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே, அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளனர்.
“ஊழல், வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவுகள், துஸ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடான பொருளாதார நிர்வாகங்கள் என்பன காரணமாகவே நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்துச் செல்கிறது.
“இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
“முழு நாட்டையுமே அதிரவைத்த ஊழல் பெருச்சாளிகளை கைது செய்து கொள்ளளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துகளை மீட்காமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டு, மக்களைத் தொடர்ந்தும் பொருளாதார சுமைக்குள் தள்ளும் இந்தப் போக்கை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
“மக்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான உழைப்பை எமது கட்சி தொடர்ந்தும் இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும் மேற்கொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025